நீரிழிவு ஒரு அறிமுகம்

ஒரு செல், சர்க்கரையை மட்டும் நேரடியாக எடுத்துக் கொள்ளாது. செல்கள் சாக்கரையை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக அது நல்ல சர்க்கரையா, கெட்ட சர்க்கரையா என்று ஆராய்ச்சி செய்யும்.
சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோய்
சர்க்கரை நோய் பல பேருக்கு இருக்கிறது. சிலருக்கு இல்லை. அதற்காக, சர்க்கரை
நோயில்லாதவர்கள் இதைப் படிக்க வேண்டாமென முடிவுக்கு வந்து விடாதீர்கள்!
இப்பொழுது உங்களுக்குச் சர்க்கரை நோய் இல்லை. எப்படியும், எங்கேயாவது
'இலவசச் சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்' ஒன்றைப் பார்க்க
வாய்ப்புள்ளது. நீங்கள் அதில் சோதனை செய்து பார்க்கும் அன்று முதல் நீங்கள்
சர்க்கரை நோயாளியாக்கப்படுவீர்கள். எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்களோ,
இல்லாதவர்களோ யாராக இருந்தாலும் தயவு செய்து இதை முழுவதுமாகப் படியுங்கள்!
நாம் சாப்பிடுகிற உணவில் மாவுச் சத்து, புரதச் சத்து, நார்ச் சத்து,
உயிர்ச் சத்து, தாதுப் பொருட்கள் போன்றவை உள்ளன. இவற்றுள் மாவுச் சத்து
(கார்போஹைட்ரேட்) சர்க்கரையாக மாறுகிறது.
நம் உடம்பிலுள்ள செல்கள் இரத்தத்திலுள்ள சத்துப் பொருட்களைத் தன் தேவைக்காக
எடுத்துக் கொண்டு உடலைச் செயல்பட வைக்கின்றன. ஒரு செல் கால்சியம்,
இரும்பு, சோடியம், மக்னீசியம் போன்ற எல்லாப் பொருட்களையும் சுலபமாக உள்ளே
எடுத்துக் கொள்ளும். ஆனால், சர்க்கரையை மட்டும் நேரடியாக எடுத்துக்
கொள்ளாது. செல்கள் சாக்கரையை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக அது நல்ல
சர்க்கரையா, கெட்ட சர்க்கரையா என்று ஆராய்ச்சி செய்யும். உணவிலுள்ள மாவுச்
சத்து வாயிலே, வயிற்றிலே, சிறுகுடலிலே ஒழுங்காக ஜீரணம் ஆனால் கிடைப்பது
நல்ல சர்க்கரை. ஒழுங்காக ஜீரணமாகாமல் அரைகுறையாக ஜீரணமாகி வரும் சர்க்கரை
கெட்ட சர்க்கரை. நல்ல சர்க்கரையென்பது வீரியம் அதிகமுள்ள சர்க்கரை. கெட்ட
சர்க்கரையென்பது வீரியம் குறைந்த சர்க்கரையென்றும் எடுத்துக் கொள்ளலாம்.
செல் சர்க்கரையிடம் நீ நல்லவனா, கெட்டவனா என்று கேட்கும். சர்க்கரையோ,
நாயகன் படத்தில் வரும் கமல்ஹாசனைப் போல, "தெரியலையேப்பா!" என்று கூறி
விடும். செல்களுக்கு நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை எனப் பிரித்துப்
பார்க்கும் அறிவு கிடையாது. எனவே, செல்கள் சர்க்கரையிடம், "நமது உடலில்
கணையம் (Pancreas) என்ற உறுப்பு இருக்கிறது. அவரிடம் செல்! நீ நல்ல
சர்க்கரையாக இருந்தால் அவர் உனக்கு இன்சுலின் (கணைய நீர்) கொடுப்பார்"
என்று கூறி விடும். இரத்தத்திலுள்ள சர்க்கரை நேரடியாக எந்தச்
செல்லுக்குள்ளேயும் போக முடியாது.
கணையம் இரத்தத்திலுள்ள ஒவ்வொரு சர்க்கரையாக எடுத்து ஆராய்ச்சி செய்யும்.
நல்ல சர்க்கரையாக இருந்தால் அதற்கு இன்சுலின் என்கிற முத்திரை கொடுக்கும்.
கெட்ட சர்க்கரையாக இருந்தால் கொடுக்காது. ஆக, கணையம் சர்க்கரையின் தரத்தைச்
சோதனை செய்யும் ஒரு தரக் கட்டுப்பாட்டு அலுவலர். எந்தச் சர்க்கரை ஒழுங்காக
ஜீரணமாகிறதோ அந்தச் சர்க்கரைக்கு மட்டும்தான் இன்சுலின் என்கிற முத்திரை
கிடைக்கிறது. செல்கள் இரத்தத்திலிருக்கும் சர்க்கரையை எடுத்துப்
பார்க்கும். அந்தச் சர்க்கரையில் இன்சுலின் என்கிற முத்திரை இருந்தால்
மட்டுமே நல்ல சர்க்கரையென்று முடிவு செய்து உள்ளே எடுக்கும். இதனால், தரம்
குறைந்த சர்க்கரை செல்லுக்குள் செல்லமுடியாது. இப்படி, உடலிலுள்ள செல்கள்
அனைத்தையும் நோயிலிருந்து காப்பாற்ற, ஆரோக்கியமாக வைத்திருக்க, கணையம்
பேருதவியாக இருக்கிறது.
"என்ன இது புதுக் குழப்பமாக இருக்கிறது! நான் பத்து வருடமாகச் சர்க்கரை
நோயாளியாக இருக்கிறேன். பெரிய, பெரிய மருத்துவரிடம் சென்றிருக்கிறேன்.
பெரிய, பெரிய மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறேன். இது வரை யாரும் நல்ல
சர்க்கரை, கெட்ட சர்க்கரையென்று சொல்லவே இல்லையே? நீங்கள் என்ன புதிதாக
உளறுகிறீர்கள்" என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்பட வாய்ப்புள்ளது.
உண்மையில், இதுவரை நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரையைப் பற்றி நீங்கள்
தெரிந்து கொள்ளாமல் இருப்பதனால்தான் 10 ஆண்டுகளாக உங்கள் நோய் குணமாகாமல்
இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக மருந்து மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டு
இருக்கிறீர்கள். இந்த நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை என்ற வேறுபாட்டை
எப்பொழுது தெரிந்து கொள்கிறீர்களோ, அந்த நிமிடம் முதல் உங்கள் சர்க்கரை
நோய் குணப்படுத்தப்படும்.
சர்க்கரையில் உள்ள கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகியவை அளவு மாறாமல்
வேவ்வேறு இடங்களுக்கு மாறி அமைவதால் சர்க்கரையின் வகை மாறுகிறது. லேக்டோஸ்,
மேனோஸ், ஒற்றைச் சர்க்கரை, கூட்டுச் சர்க்கரை - இப்படிச் சர்க்கரையில் பல
வகைகள் உள்ளன

சர்க்கரை ஒரு ஐசோமர். உயிர்ம வேதியியல் (Bio – Chemistry )
படித்தவர்களுக்கு நன்றாகப் புரியும் என நினைக்கிறேன். ஒரே பொருளில் நிறைய
வகைகள் (Type) இருந்தால் அதை ஐசோமர் என அழைக்கிறோம்.
சர்க்கரையில் உள்ள கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகியவை அளவு மாறாமல் வேவ்வேறு இடங்களுக்கு மாறி அமைவதால் சர்க்கரையின் வகை மாறுகிறது.
லேக்டோஸ், மேனோஸ், ஒற்றைச் சர்க்கரை, கூட்டுச் சர்க்கரை - இப்படிச்
சர்க்கரையில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு கட்டமைப்பு
(STRUCTURE) உள்ளது.
இவற்றுள், ஒரு சில வகைச் சர்க்கரைகள் மட்டுமே மனித உடம்பிலுள்ள
செல்களுக்குப் பொருந்தும். ஒரு சில சர்க்கரைகள் பொருந்தாது. எந்தெந்த வகைச்
சர்க்கரை மனித உடம்புக்குப் பொருந்துமோ அவை அனைத்தும் நல்ல சர்க்கரைகள்.

எவையெல்லாம் பொருந்தாதோ அவை அனைத்தும் கெட்ட சர்க்கரைகள். கணையம், எந்த
வகைச் சர்க்கரை மனித உடம்புக்கு ஒத்து வருமோ, அதற்கு மட்டுமே இன்சுலின்
கொடுக்கும். மனித உடலுக்கு நோயை உண்டு பண்ணுகிற, ஒத்து வராத, தேவைப்படாத
சர்க்கரைகளுக்கு இன்சுலின் கொடுக்காது.
நாம் மருத்துவமனைகளில் சென்று சர்க்கரைச் சோதனை செய்கிறோம். அதில் 100
இருக்கிறது, 200 இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், அந்த அளவில்
எந்தெந்த சர்க்கரை எவ்வளவு இருக்கிறது என்று யாரும் அளந்தது கிடையாது.
இப்படி, மொத்தமாகச் சர்க்கரை எவ்வளவு இருக்கிறது என்று பார்ப்பதில் எந்த
அர்த்தமும் கிடையாது. நாம் பார்க்கும் சர்க்கரையின் அளவில் எந்தெந்த வகைச்
சர்க்கரை எந்த அளவு இருக்கின்றது எனப் பார்ப்பதற்குத் தனியாக ஒரு கருவி
உள்ளது. அதன் பெயர் IR STUDY மற்றும் UV Spectrum Study. இந்த வசதி உள்ள
கருவிகளில் மட்டுமே இரத்தத்திலுள்ள சர்க்கரை வகைகளைக் கண்டறிய முடியும்.
இந்தக் கருவிகள் எந்த மருத்துவமனையிலும் கிடையாது. பெரிய பெரிய
ஆராய்ச்சிக்கூடங்களில் மட்டுமே உள்ளன. எனவே, சர்க்கரையைப் பொதுவாகச் சோதனை
செய்து பார்ப்பதில் எந்த அர்த்தமுமில்லை. எந்தப் பயனும் கிடையாது.
மருத்துவமனையில் நீரிழிவுச் சோதனை முடிந்ததும் அறிக்கையில் (ரிசல்ட்)
'இரத்தத்தின் சர்க்கரை அளவு' (Blood Glucose Level) என்று எழுதிக்
கொடுக்கிறார்கள்.உண்மையில், இரத்தத்தின் சர்க்கரை அளவை யாரும் பார்ப்பது
கிடையாது. இப்பொழுது பார்க்கப்படும் அளவு Plasma Glucose Level ஆகும்.
Plasma Glucose Level என்பது வேறு. இரத்தத்தின் சர்க்கரை அளவு என்பது வேறு.
சொல்லப் போனால், சர்க்கரை நோயென்பது கணையம் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது.
நாம் சாப்பிடுகிற சாப்பாட்டில் உள்ள சர்க்கரை ஒழுங்காக ஜீரணமாகாததால்
கணையம் இன்சுலின் கொடுக்க மறுக்கிறதே தவிர, கணையம் தவறு செய்யவில்லை
என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்! எப்பொழுது உடலில் இன்சுலின் பற்றாக்குறை
ஏற்படுகிறதோ நாம் உணவை ஒழுங்காக ஜீரணம் பண்ணவில்லை என்றுதான் அர்த்தமே
தவிர, கணையத்தில் குறை கிடையாது. இதற்கும் உடலிலுள்ள உறுப்புகளுக்கும்
எந்தச் சம்பந்தமும் கிடையாது. எனவே, உணவை எந்த முறையில் சாப்பிட்டால் அது
இரத்தத்தில் நல்ல சர்க்கரையாகக் கலக்கும் என்கிற ஒரே ஒரு சுலபமான
வித்தையைக் கற்றுக் கொள்வது மூலமாக நாம் இந்த நிமிடத்தில் சர்க்கரை நோயைக்
குணப்படுத்த முடியும். கணையம் இன்சுலின் வைத்துக் கொண்டிருக்கிறது. அது
உங்களுக்குத் தராமல் வேறு யாருக்குக் கொடுக்கும்? முன்பே பார்த்தபடி, நாம்
சாப்பிடுவது நல்ல சர்க்கரையாக இருந்தால் மட்டுமே கணையம் இன்சுலினைக்
கொடுக்கும். கெட்ட சர்க்கரையாக இருந்தால் கொடுக்காது. இந்த நல்ல சர்க்கரை,
கெட்ட சர்க்கரை என்பவை என்ன என்பதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள
மேற்கொண்டு சில எடுத்துக்காட்டுகளையும் விளக்கங்களையும் பார்க்கலாம்...
நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.
கழிவின் தேக்கம் வியாதி.
கழிவின் வெளியேற்றம் குணம்.
இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.
திருக்குறள் (அறிவுடைமை #0423)
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
தெளிவுரை: எந்தவொரு
பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக்
கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.
கிளைகோஜன் மற்றும் அட்ரினல் சுரப்பியின் பங்கு
அட்ரினல் சுரப்பி ஏற்கெனவே கிளைகோஜன்னாக மாற்றிக் கல்லீரல், தசை நார்கள், மூளை
ஆகிய பகுதிகளில் சேமிக்கப்பட்ட சர்க்கரைகளை எடுத்து வந்து செலவு செய்யும்.
நாம்
குழந்தையாக இருக்கும்பொழுது நாம் சாப்பிடுகிற உணவு நல்லபடியாக ஜீரணம்
ஆகிறது. ஏனென்றால், குழந்தைக்கு டென்சன், கோபம், பயம் ஏதும் கிடையாது.
அதனால், நல்லபடியாக ஜீரணமாகி நல்ல சர்க்கரை மட்டுமே இரத்தத்தில் கலக்கிறது.
உதாரணமாக, ஒரு குழந்தை சாப்பிடுகிறது. அதில் 500 சர்க்கரை இரத்தத்தில்
கலக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தக் குழந்தை நல்லபடியாக ஜீரணம்
செய்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது, ஒழுங்காக ஜீரணமான 500
சர்க்கரையும் இரத்தத்தில் கலக்கிறது. இந்த 500 நல்ல சர்க்கரையும்
செல்லுக்குள் செல்வதற்கு முயற்சி செய்யும். ஆனால், என்னதான் நல்ல
சர்க்கரையாக இருந்தாலும், இன்சுலின் இல்லையெனும் காரணத்தால் செல்லுக்குள்
நுழைய முடியாது. இந்த 500 சர்க்கரையும் கணையத்திற்குச் செல்லும். கணையம்
இந்த 500 சர்க்கரைகளையும் சோதித்துப் பார்த்து நல்ல சர்க்கரைகளாக
இருப்பதால் 500 இன்சுலினைச் சுரக்கும். ஒரு சர்க்கரைக்கு ஒரு இன்சுலின்தான்
கிடைக்கும். அதுவும் நல்ல சர்க்கரையாக இருந்தால் மட்டுமே. இந்த 500
சர்க்கரைகளும் நல்ல சர்க்கரைகளாக இருப்பதால், அனைத்திற்கும் இன்சுலின்
கிடைத்து விட்டது. இப்பொழுது குழந்தையின் இரத்தத்தில் 500 நல்ல
சர்க்கரைகள், இன்சுலின் என்ற சாவியுடன் சுற்றிக் கொண்டிருக்கின்றன.
குழந்தையின்
உடம்புக்கு 300 சர்க்கரை தேவைப்படுகிறது என வைத்துக் கொள்வோம். செல்கள்
இன்சுலின் உள்ள சர்க்கரைகளைத் தனது வேலைக்காக, தேவைக்காக, நோயைக்
குணப்படுத்துவதற்காக எடுத்துக் கொள்கின்றன. இப்பொழுது 300 சர்க்கரைகள்
செல்களுக்குள் புகுந்து விட்டன. மீதமுள்ள 200 சர்க்கரைகள் இரத்தத்தில்
மீண்டும் மீண்டும் சுற்றிச் சுற்றி வரும். செல்கள் தேவைக்கு அதிகமான
பொருட்களை ஒருபொழுதும் உள்ளே எடுத்துக் கொள்ளாது. "இரத்தத்தில் 500
சர்க்கரை இருப்பதால் நாம் சேர்த்து வைத்துக் கொள்வோம்; பிறகு
தேவைப்படுமென்று செல்கள் எடுக்காது. இப்பொழுது, தேவையில்லாத ஆனால் நல்ல
தரம் வாய்ந்த 200 சர்க்கரைகள் இரத்தத்தில் சுற்றிச் சுற்றி வருகின்றன.
இந்தச் சர்க்கரைகள் என்னவாகும்? நம் வீட்டிற்கு 500 ரூபாய் சம்பாதித்து
எடுத்துப் போகிறோம். குடும்பச் செலவுக்கு 300 ரூபாய் தேவைப்படுகிறது.
மீதமுள்ள 200 ரூபாயை அளவுக்கு அதிகமாகச் சம்பாதித்து விட்டோமென்று
கிழித்துக் குப்பையில் போடுவோமா? என்ன செய்வோம்? பத்து, பத்து ரூபாயாக
இருந்தால் இரண்டு நூறு ரூபாய்த் தாள்களாக மாற்றி பீரோவில் சேர்த்து
வைப்போம். அதே போல், குழந்தை சம்பாதித்தது 500 சர்க்கரை, செலவு 300
சர்க்கரை. மீதமுள்ள 200 சர்க்கரையை, அதாவது குளுக்கோசை ஒன்று சேர்த்து ஒரு
பொருளாக மாற்றும் நமது கல்லீரல். அதன் பெயர் கிளைகோஜன்.
கிளைகோஜன்
குளுக்கோஸ் என்பது
ஒற்றைச் சர்க்கரை. கிளைகோஜன் என்பது நிறையச் சர்க்கரைகளை ஒன்று சேர்த்தால்
கிடைக்கும் ஒரு பொருள். நாம் எப்படி 10 ரூபாய் நோட்டை 100 ரூபாயாக மாற்றிச்
சேமித்து வைக்கிறோமோ, அதே போல் தனித் தனிச் சர்க்கரைகளாக இருப்பவற்றை
ஒன்று சேர்த்து கிளைகோஜன்னாக அதாவது செறிவூட்டப்பட்ட சர்க்கரையாக மாற்றிக்
கல்லீரல், தசை நார்கள், மூளை ஆகிய இடங்களில் உடம்பு சேமித்து வைக்கிறது.
இப்பொழுது அந்தக் குழந்தைக்குச் சர்க்கரை நோய் கிடையாது.
குழந்தையின் ஜீரணத்தை முதன் முதலில் கெடுப்பது அதன் அம்மாதான்
இந்தக் குழந்தையின்
ஜீரணத்தை முதன் முதலில் கெடுப்பது அதன் அம்மாதான். மனதிற்குப் பிடித்தவாறு
விளையாடிக் கொண்டு, சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தையை முதன் முதலில்
நாம் பள்ளிக்கு அனுப்புகிறோம். "8 மணிக்கு ஸ்கூல் வேன் வந்து விடும்! உடனே
தயாராகு!" என்று தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை எழுப்பி,
விருப்பமில்லாமல் குளிப்பாட்டி, விருப்பமில்லாமல் பசியில்லாமல் சாப்பாடு
ஊட்டுகிறோம். தாய்மார்கள் சிலர் குழந்தை சாப்பிடவில்லையென்றால்
அடிக்கிறார்கள். ஒரு டம்ளரில் தண்ணீரை வைத்து நடுநடுவே ஊற்றி ஊற்றி விழுங்க
வைக்கிறார்கள்.
இது போலக்
குழந்தைக்கு விருப்பமில்லாதபோது, பசியில்லாதபோது உணவு கொடுத்தால் அந்த உணவு
ஒழுங்காக ஜீரணம் ஆவது கிடையாது. இப்பொழுது அந்தக் குழந்தைக்கு 300
சர்க்கரை ஒழுங்காக ஜீரணமாகி 200 சர்க்கரை ஒழுங்காக ஜீரணமாகவில்லை என்று
வைத்துக் கொள்வோம். என்னாகும்? இரத்தத்தில் 300 நல்ல சர்க்கரையும், 200
கெட்ட சர்க்கரையும் உள்ளன. குழந்தையின் கணையம் 300 இன்சுலின் மட்டுமே
சுரக்கும். கெட்ட சர்க்கரைகளுக்கு இன்சுலின் சுரக்காது. எனவே, கணையம்
குறைவாக இன்சுலின் சுரப்பது கணையத்தின் தவறு கிடையாது. ஜீரணத்தின் குறைபாடே
என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்!
இந்த இன்சுலின்
பெற்றுக் கொண்ட 300 நல்ல சர்க்கரைகள் செல்லுக்குள் செல்லும். ஆனால்,
இன்சுலின் கிடைக்காத 200 கெட்ட சர்க்கரைகள் இரத்தத்தில் சுற்றிச் சுற்றி
வரும். இவை செல்லுக்குள்ளும் நுழைய முடியாது. கிளைகோஜன்னாகவும் மாற
முடியாது. எந்தக் கல்லீரல் அளவுக்கதிகமான நல்ல சர்க்கரைகளை பீரோவில்
சேமிப்பது போல் ஆங்காங்கே கொண்டு சேர்த்ததோ, அதே கல்லீரல் இன்சுலின் இல்லாத
சர்க்கரைகளை, 'இவை கெட்ட சர்க்கரைகள்; இவற்றால் நம் உடலுக்கு எந்தப்
பயனும் இல்லை' என்று முடிவெடுத்து அவற்றைச் சிறுநீரகத்திற்கு அனுப்பி
வைக்கும். சிறுநீரகம் இந்தக் கெட்ட சர்க்கரைகளை சிறுநீர்ப் பைக்கு அனுப்பி
வைக்கும். கெட்ட சர்க்கரை சிறுநீராக வெளியேறும்.
சர்க்கரை
நோயாளிகளுக்கு அதிகமாகச் சிறுநீர் செல்வதற்கும், அந்தச் சிறுநீரில்
சர்க்கரை இருப்பதற்கும் காரணம் கணையமோ, கல்லீரலோ, சிறுநீரகமோ, சிறுநீர்ப்
பையோ கிடையாது. ஒரு கம்பெனியில் தயாரிக்கப்படும் தரம் குறைந்த பொருட்களை
எப்படி வெளியே வீசுகிறார்களோ அதே போல் உணவு ஒழுங்காக ஜீரணமாகாததால் கிடைத்த
கெட்ட சர்க்கரையை நம் உடம்பு வேண்டாமென்று வெளியே கழிவாக அனுப்புகிறது.
இந்தச் சிறுநீரைச்
சோதித்து அதில் இருக்கும் சர்க்கரையின் அளவை வைத்து உங்களைச் சர்க்கரை
நோயாளி என்று கூறுகிறார்கள். இது ஒரு தவறான கருத்தாகும். சிறுநீராகச்
செல்லும் சர்க்கரை அனைத்தும் தேவையில்லாத சர்க்கரையென்பதைப் புரிந்து கொள்ள
வேண்டும்! நம் உடலுக்கு அறிவுள்ளது என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம்.
சிறுநீரகமும், சிறுநீர்ப் பையும் அறிவு கெட்டத்தனமாக நல்ல சர்க்கரையை
என்றுமே வெளியேற்றுவதில்லை. கிளைகோஜன்னாக மாறும் அனைத்தும் நல்ல
சர்க்கரைகள். சிறுநீராக வெளியேறும் அனைத்தும் கெட்ட சர்க்கரைகள். எனவே,
சிறுநீரில் சர்க்கரை வருகிறதென்று தயவு செய்து பயப்படாதீர்கள்! அது
சாக்கடைக்குச் செல்ல வேண்டிய சர்க்கரை.
ஆனால், இப்பொழுதும்
இந்தக் குழந்தைக்குச் சர்க்கரை நோய் கிடையாது. இந்தக் குழந்தை படித்துப்
பெரிய ஆளாகி ஒரு நிறுவனத்திற்குத் தலைவராகிறது என்று வைத்துக் கொள்வோம்.
முதலாளிகள் என்றுமே காலையில் ஒழுங்காகச் சாப்பிட மாட்டார்கள். மதியம்
பசியெடுக்கும்பொழுது சாப்பிடாமல் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
இரவு 11 மணி, 12 மணி போல வீட்டுக்கு வந்து தேவையில்லாமல் அளவுக்கதிகமாகச்
சாப்பிடுவார்கள். இப்படித் தவறான உணவுப் பழக்க வழக்கம் ஏற்படும்பொழுது
ஜீரணம் ஒழுங்காக ஆகாமல் கெட்ட சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.
உதாரணமாக,
ஒருவருக்கு 300 கெட்ட சர்க்கரையும், 200 நல்ல சர்க்கரையும் இரத்தத்தில்
கலக்கிறதென்று வைத்துக் கொள்வோம். 200 நல்ல சர்க்கரைக்கு இன்சுலின்
கிடைத்தவுடன், செல்லுக்குள் புகுந்து விடும். 300 சர்க்கரை இன்சுலின்
கிடைக்காததால் சிறுநீர் வழியாக வெளியேறி விடும். ஆனால், அவருக்கு இன்று
உடலுக்கு 300 சர்க்கரை தேவைப்படுகிறது. 200 மட்டுமே உள்ளே சென்றுள்ளது. 100
பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உடல் என்ன செய்யும்?
அட்ரினல் சுரப்பி
நம்
வீட்டில் 500 ரூபாய் சம்பாதித்து வருகிறோம். அதில் 300 ரூபாய் கள்ள
நோட்டு, 200 ரூபாய் நல்ல நோட்டு. 200 ரூபாயைக் குடும்பச் செலவுக்குப்
பயன்படுத்துவோம். 300 ரூபாயை, அவை கள்ள நோட்டுகள் எனத் தெரிந்தவுடன்
கிழித்துக் குப்பையில் போடுவோம். அதே போல், எப்பொழுது கள்ளச் சர்க்கரை
உடலுக்குள் செல்கிறதோ, உடல் சிறுநீராக வெளியில் அனுப்புகிறது. ஆனால்,
உங்கள் குடும்பத்துக்கு 300 ரூபாய் பணம் தேவைப்படுகிறது. 200 ரூபாய்
மட்டுமே நல்ல நோட்டாக இருந்ததால் பயன்படுத்த முடிந்தது. இப்பொழுது 100
ரூபாய் பட்ஜெட்டில் துண்டு விழுந்துள்ளது. இப்பொழுது என்ன செய்வீர்கள்?
ஏற்கெனவே சம்பாதித்து வைத்த 100 ரூபாயை பீரோவிலிருந்து எடுத்து வந்து செலவு
செய்வீர்கள் இல்லையா? அதே போல், எப்பொழுது செல்களுக்கு நல்ல சர்க்கரை
இரத்தத்தில் இல்லையோ இரு புருவங்களுக்கு இடையிலிருக்கும் பிட்யூட்டரி
சுரப்பி ACTH என்ற நீரைச் சுரக்க ஆரம்பிக்கும். இந்த நீர் சிறுநீரகத்துக்கு
மேலே அட்ரினல் சுரப்பியை (தொப்பி சுரப்பி) வேலை செய்ய வைக்கும். இந்த
அட்ரினல் சுரப்பி ஏற்கெனவே கிளைகோஜன்னாக மாற்றிக் கல்லீரல், தசை நார்கள்,
மூளை ஆகிய பகுதிகளில் சேமிக்கப்பட்ட சர்க்கரைகளை எடுத்து வந்து செலவு
செய்யும். இப்படிச் சிறு வயது முதல் நாம் நிறையச் சர்க்கரையைச்
சம்பாதிக்கும்பொழுது பீரோவில் சேர்த்து வைக்கிறோம். சர்க்கரைப் பற்றாக்குறை
ஏற்படும்போது பீரோவிலிருந்து எடுத்துச் செலவு செய்கிறோம்.
எனவே, ஒரு
விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்! லோ சுகரால் உலகத்தில்
யாருக்கும் மயக்கம் வராது. சர்க்கரையின் அளவு குறைந்த உடனே சேமித்து வைத்த
சர்க்கரையை எடுத்துச் செலவு செய்யும் இப்படியோர் அமைப்பு நம் உடம்பில்
இருக்கும் பொழுது லோ சுகரால் மயக்கம் வரும் என்பது ஒரு தவறான கருத்தாகும்.
உடலில் கிளைகோஜன் இருக்கும் வரை யாருக்கும் மயக்கம் வரவே வராது!
ஒரு
காலக்கட்டத்தில் நம் உடம்பில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கிளைகோஜனும்
தீர்ந்து விடும். அப்பொழுது, பெட்ரோல் தீர்ந்த கார் போல, மின்சாரம் இழந்த
காற்றாடி போல உடனே நம் இயக்கம் நின்று போகும். ஆக, சர்க்கரை நோயாளிகளுக்கு
மயக்கம் வருவதற்குக் காரணம் சர்க்கரை அதிகமாக இருப்பதோ, குறைவாக இருப்பதோ
கிடையவே கிடையாது. சர்க்கரைப் பற்றாக்குறை ஏற்படும்பொழுது, சேமித்து
வைக்கப்பட்ட கிளைக்கோஜனும் இல்லாவிட்டால் மட்டுமே மனிதனுக்கு மயக்கம்
வரும். சர்க்கரை நோயாளிகள் மயக்கம் போடுவது கணையத்தின் குறைபாடும்
கிடையாது. சர்க்கரை நோயும் கிடையாது. உடலில் சேமித்து வைக்கப்பட்ட சர்க்கரை
தீர்ந்து விட்டதென்று மட்டுமே அதற்கு அர்த்தம்.
High Sugar(ஹை சுகர்), Low Sugar (லோ சுகர்) பற்றிய தெளிவான விளக்கம்
உடலிலுள்ள செல்கள் வேலை செய்வதற்காக அல்லது நோயைக் குணப்படுத்துவதற்காக
சர்க்கரை, B.P ஆகியவற்றின் அளவு அதிகரிக்கும்.
ஹை
சுகர் (High sugar), லோ சுகர் (Low sugar) இரண்டு பிரச்சினைகளும்
ஒன்றுதான். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. உதாரணமாக, ஒருவர்
சாப்பிடும் உணவில் 500 சர்க்கரைகள் இருக்கின்றன. இந்த ஐந்நூற்றில் 100 நல்ல
சர்க்கரை,400 கெட்டசர்க்கரையென வைத்துக் கொள்வோம். இவை இரத்தத்தில்
கலக்கின்றன. அவர் உடலில் சேர்த்து வைக்கப்பட்ட கிளைகோஜென் (Glycogen)
தீர்ந்து விட்டதென வைத்துக் கொள்வோம். இப்பொழுது என்னாகும்?100 நல்ல
சர்க்கரை இன்சுலின் வாங்கிக்கொண்டு செல்லுக்குள்ளே புகும். 400 கெட்ட
சர்க்கரை இன்சுலின் கிடைக்காததால் சிறுநீர் வழியாக வெளியேறும். அட்ரினல்
சுரப்பி, கிளைகோஜனைத் தேடும். ஆனால், கிளைகோஜன் இல்லையென்பதால் இரத்தத்தில்
தேவையான அளவு சர்க்கரை விநியோகம் (குளுக்கோஸ் சப்ளை) செய்ய முடியாது.
எனவே, செல்களுக்குள் சர்க்கரை போகாததால் செல்கள் மயக்கமடையும். நோயாளி
மயக்கமடைந்து விடுவார்.
இந்த
நேரத்தில் அவர் இரத்தத்தில் சர்க்கரை அளவைச் சோதனை செய்தால் குறைவாக
இருக்கும். மருத்துவர்கள் உடனே "லோ சுகரால் மயக்கம் வந்து விட்டது" என்று
கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் சர்க்கரை அளவு குறைந்ததால் அவருக்கு மயக்கம் வரவில்லை. உடலில் கிளைகோஜன் இல்லையென்பதால்தான் மயக்கம் வந்தது.
உதாரணம்
இரண்டு, இரத்தத்திலுள்ள 100 நல்ல சர்க்கரை செல்களுக்குள் போய்விட்டது;
ஆனால், 400 கெட்ட சர்க்கரை இரத்தத்திலேயே இருக்கிறது; இன்னும் சிறுநீராக
வெளியே செல்லவில்லை என வைத்துக் கொள்வோம். இந்த நிலையிலும், செல்களுக்குச்
சர்க்கரை தேவைப்படும் பொழுது கிளைக்கோஜன் இல்லையென்ற காரணத்தினால் மயக்கம்
வரும். இப்பொழுது அவருக்கு இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தால் சர்க்கரை
400 இருக்கும். மருத்துவர்கள் சர்க்கரை அதிகமாக இருந்ததால்தான் இவருக்கு
மயக்கம் வந்து விட்டது என்று கூறுவார்கள். ஆக, சர்க்கரை கூடுவதாலோ,
குறைவதாலோ ஒருவருக்கு மயக்கம் வருவதில்லை.
உடலில் சேர்த்து வைக்கப்பட்ட கிளைகோஜன் என்கிற செறிவூட்டப்பட்ட சர்க்கரை தீரும்பொழுது மட்டுமே மயக்கம் வருகிறது. கெட்ட
சர்க்கரை சிறுநீர் வழியாக வெளியே போனால் அதைப் பற்றி நாம் கவலைப்படத்
தேவையில்லை. உடலில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள கிளைக்கோஜன் இருக்கிறதா
இல்லையா என்பதைப் பற்றி மட்டுமே நாம் கவலைப்பட வேண்டும். எனவே, சர்க்கரைப் பரிசோதனைஎன்பது ஒரு தேவையில்லாத வேலை.
சிலருக்குச்
சர்க்கரை அளவு குறைவாக இருக்கும். ஆனால், மயக்கம் போட மாட்டார்.
ஏனென்றால், கிளைக்கோஜென் சப்ளை ஆகி விடும். சிலருக்குச் சர்க்கரை அளவு
அதிகமாக இருக்கும். மயக்கம் போட மாட்டார். ஏனென்றால், அது நல்ல
சர்க்கரையாகவும் இருக்கலாம். சிலர் மருத்துவமனைக்குச் சென்று சர்க்கரைப்
பரிசோதனை செய்வார்கள். பரிசோதனை செய்வதற்கு முன்பு தெம்பாக இருப்பார்கள்.
பரிசோதனை ரிப்போர்ட்டில் 300 இருக்கிறது, 400 இருக்கிறது என்று தகவல்
அறிந்தவுடன் உடம்பில் ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்படும்.
இதற்குக்காரணம் என்னவென்றால், சர்க்கரை அளவு மிதமாக இருக்க வேண்டுமென்று
நாம் புத்தியில் பதிவு செய்துள்ளோம். இதற்கு மேலேயும், கீழேயும் அளவு
காட்டும்பொழுது நமது புத்தி நம் மனதைக் கெடுத்து, மனம் உடலைக் கெடுத்து
நோய் உண்டாக்குகிறது.
உலகத்தில்
யாருக்கும் சர்க்கரை மிதமாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது; இருக்காது;
இருக்கத் தேவையில்லை. சாப்பிட்டவுடன் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்.
நல்ல சர்க்கரைக்கு இன்சுலின் கிடைக்கும். கெட்ட சர்க்கரைக்கு இன்சுலின்
கிடைக்காது. தேவையான சர்க்கரைகள் செல்லுக்குள்ளே போகும். கெட்ட சர்க்கரைகள்
சிறுநீராகப் போகும். அளவுக்கதிகமான சர்க்கரைகள் கிளைக்கோஜென்னாக மாறும்.
இந்த வேலைகள் உடலில் நடந்து கொண்டிருக்கும்போது சர்க்கரையை யார் அளந்து
பார்த்தாலும் அது முன்பின் முரணாகத்தான் இருக்குமேதவிர, சீராக இருக்காது.
சில
நேரங்களில், உடலுக்கு நோய்கள் வரும்பொழுதோ, உடலில் வேறு சில முக்கியமான
வேலைகள் இருக்கும்பொழுதோ கெட்ட சர்க்கரையை சிறுநீராக அனுப்புவது,
நல்லசர்க்கரையை கிளைக்கோஜென்னாக மாற்றுவது ஆகியவை தாமதமாகவும்
வாய்ப்புள்ளது. இந்தச் சமயங்களில் நாம் சர்க்கரை அளவைப் பரிசோதனை செய்து
அதிகமாக உள்ளது, குறைவாக உள்ளது என்று பயப்பட்டால் இந்த பயம்தான் நோயே
தவிர, இரத்தத்திலுள்ள குளுக்கோஸின் அளவு நோய் கிடையாது.
செல்களுக்குச்
சர்க்கரையின் அளவு அதிகமாகத் தேவைப்படும்பொழுது இரத்தத்தில் சர்க்கரையின்
அளவு அதிகரிக்கும். செல்களுக்குச் சர்க்கரையின் அளவு குறையும்போது
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாகும். இதை யாரும் ஒரு குறிப்பிட்ட
அளவு வைத்து ஆராய்ச்சி செய்யக் கூடாது!
நீங்கள்
அமைதியாக இருக்கிறீர்கள். உங்கள் சர்க்கரை அளவு சீராக இருக்கிறது. ஒரு
பாம்பை உங்கள் மடியில் போட்டால் பாம்பைப் பார்த்து பயப்பட்ட அடுத்த விநாடி
உங்கள் சர்க்கரை அளவைச் சோதித்துப்பாருங்கள். ஹைசுகர் எனச் சொல்லப்படும்
அளவையும் தாண்டியிருக்கும். உடலுக்கு அறிவில்லையா? தேவையில்லாமல் ஏன்
இப்படி அதிகப்படுத்துகிறது? ஏனென்றால், ஒரு வேளை பாம்பு கடித்தால்,
விஷத்தைத் தூக்கி வெளியே வீசுவதற்கு உடம்பிலுள்ள அனைத்து செல்களுக்கும்
சர்க்கரை தேவைப்படும். அதனால், சேர்த்து வைக்கப்பட்ட சர்க்கரையை
இரத்தத்தில் அனுப்புகிறது. பாம்பு வெளியில் சென்ற பிறகு 'அப்பாடா' என்று
உங்கள் மனதிலுள்ள பயம் தெளிவடைந்தால் ஒரு 10 நிமிடத்திற்குப் பிறகு
சர்க்கரையின் அளவு ஒழுங்காகி விடும்.
இப்பொழுது
சொல்லுங்கள்! சர்க்கரை ஏறி இறங்கியதால் உங்களுக்கு நோய் வந்ததா இல்லை,
பாதுகாப்பு வந்ததா? இதே போல் சர்க்கரை அளவு சரியாக இருக்கும் ஒருவரின்
கையில் ஒரு கத்தியால் சிறியதாக ஒரு காயத்தை ஏற்படுத்தினால் அடுத்த விநாடி,
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். ஏன்? காயம்பட்ட இடத்திலுள்ள
செல்கள் தங்களைக் குணப்படுத்திக் கொள்வதற்காக வேலை செய்ய ஆரம்பிக்கும்.
உடலிலுள்ள செல்கள் வேலை
செய்வதற்காக அல்லது நோயைக் குணப்படுத்துவதற்காக சர்க்கரை, B.P ஆகியவற்றின்
அளவு அதிகரிக்கும். அந்த நேரத்தில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைச்
சோதித்துப் பார்த்து அதிகமாகியிருக்கிறது இது நோயெனக்கூற முடியுமா?
சீரான சர்க்கரை அளவு என்பது ஆபரேஷன் செய்யும்பொழுதும், அவசரக் காலத்திலும் மட்டுமே செல்லுபடியாகும்.
சர்க்கரை நோய் வந்தவர்கள் முதலில் மாத்திரை சாப்பிட்டால், பிறகு அளவு அதிகமாகிக் கொண்டே போகும். பிறகு, உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும். கண்ணில் பாதிப்பு ஏற்படும்.
சீரான
சர்க்கரை அளவு (Normal Sugar level) என்பது ஆபரேஷன் செய்யும்பொழுதும்,
அவசரக் காலத்திலும் மட்டுமே செல்லுபடியாகும் என்று பார்த்தோம். ஏன் என்று
கேட்டால், சில அவசரக் கால சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்றவற்றிற்கே
கணையத்தில் அடிபட்டு இருக்கிறதா என்று கவனிக்க வேணடும். கல்லீரல் என்ன ஆனது
என்று யாருக்கும் தெரியாது. இந்த நேரத்தில் இரத்தத்தில் சர்க்கரை அளவை ஒரு
குறிப்பிட்ட அளவிற்குள் வைத்தால் உயிரைக் காப்பாற்றலாம் என்பதுதான்
அறிவியல். இதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் சீரான சர்க்கரை அளவு என்பது.
இதற்காகத்தான்
மருத்துவர்களுக்கு இது அவர்கள் படிப்பில் சொல்லிக் கொடுக்கப்பட்டது.
இதற்காகக் கண்டு பிடிக்கப்பட்டவைதான் சர்க்கரை மருந்து மாத்திரைகள்.
சரி, ஹை சுகர், லோ சுகர்
போன்றவற்றால் ஒருவர் மயக்கம் போட்டு விழுந்து விட்டால், அவரை என்னிடம்
கூட்டிக் கொண்டு வந்தால், நான் அவர் காதில் "சர்க்கரை என்பது நோயே அல்ல!
எழுந்து உட்காருங்கள்" என்று சொன்னால் உட்காருவாரா? மாட்டார்.
அவருக்கு மருந்து,
மாத்திரை, இன்சுலின் கொடுக்கத்தான் வேண்டும். அப்போதுதான் உயிரைக்
காப்பாற்ற முடியும். எனவே, சர்க்கரை மருந்து, மாத்திரைகள் உயிரைக்
காப்பாற்றும் அற்புதமான கண்டுபிடிப்பு. ஆனால், அதை இப்படிப்பட்ட அவசரக்
காலங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாழ்க்கை முழுவதும்
பயன்படுத்துவது தேவையில்லாத ஒன்று. சரி,
சர்க்கரை மருந்து, மாத்திரை என்ன செய்கிறது?
சர்க்கரை
400 இருக்கும்பொழுது, அதாவது ஹை சுகரில் மயக்கம் போட்ட ஒரு நோயாளி
சர்க்கரை மாத்திரை சாப்பிட்டவுடன் அந்த மாத்திரை நேராகச் சென்று
கணையத்திடம் “அந்த 400 கெட்ட சர்க்கரைக்கு இன்சுலின் கொடு” என்று கேட்கும்.
கணையம் சொல்லும், “நான் தர மாட்டேன். என்னிடம் இன்சுலின் உள்ளது. ஆனால்,
அந்தச் சர்க்கரைகள் ஒழுங்காக ஜீரணமாகவில்லை என்பதால் நான் கொடுக்கவில்லை.
ஏனென்றால், கெட்ட சர்க்கரை செல்லிற்குள் சென்றால் உறுப்புகளுக்கு நோய்
வரும்” என்று. மாத்திரை
இந்தக் கணையத்திடம் வலுக்கட்டாயமாக இன்சுலின் வாங்கி இந்த 400 கெட்ட
சர்க்கரைக்குக் கொடுத்து விடும். மருந்து, மாத்திரை கெட்ட சர்க்கரையை நல்ல
சர்க்கரையாக மாற்றுவது கிடையாது. அவை கெட்ட சர்க்கரைக்கு நல்ல
சர்க்கரையென்ற போலிச் சான்றிதழை வாங்கிக் கொடுத்து விடுகின்றன. எனவே,
சர்க்கரை நோய்க்கான மருந்து மாத்திரைகளை அவசரக் காலத்தில் மட்டுமே
பயன்படுத்த வேண்டும். அதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவைதான் அவை.
உங்களுக்குப் பெரிய
அறிவியல் எல்லாம் தெரிய வேண்டிய அவசியம் கிடையாது. சிறிய, அடிப்படையான ஒரு
விஷயத்தை மட்டும் யோசியுங்கள்! சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் மாத்திரையின்
அளவு போகப் போக அதிகமாகிறதா, குறைகிறதா? எப்பொழுது அதிகமாகிறதோ அப்பொழுது
உங்கள் நோய் பெரிதாகிக் கொண்டு வருகிறது என்று அர்த்தம். ஒரு நோயைக்
குணப்படுத்துவதற்கு மருத்துவர் தேவையா அதிகப்படுத்துவதற்கு மருத்துவர்
தேவையா?
ஏன் மருந்தின் அளவு
அதிகமாகிறதென்றால், கெட்ட சர்க்கரைகள் எல்லா உறுப்புகளுக்குள்ளும்
செல்லும்போது எல்லா உறுப்புக்களும் பாதிப்படைகின்றன. கணையமும்
பாதிப்படைகிறது. சர்க்கரை நோய் வந்தால் எல்லா நோயும் வருமென்று
கூறுவார்கள். இது தவறான கருத்து. சர்க்கரை நோய்க்கு மருந்து மாத்திரை
எடுத்துக் கொண்டால்தான் எல்லா நோயும் வருமென்பதுதான் ஆணித்தரமான உண்மை.
சர்க்கரை நோய் வந்தவர்கள்
முதலில் மாத்திரை சாப்பிட்டால், பிறகு அளவு அதிகமாகிக் கொண்டே போகும்.
பிறகு, உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும். கண்ணில் பாதிப்பு
ஏற்படும். பிறகு கண் சம்பந்தப்பட்ட நோய்க்குத் தனி மருந்தும், சில அறுவை
சிகிச்சைகளும் செய்ய வேண்டி இருக்கும். பிறகு சிறுநீரகத்தில் கல் வரும்.
அதற்குத் தனி மருந்தும், அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டியதிருக்கும். உடல்
சோர்வு ஏற்படும். புதுப் புது நோய்கள் வரும். ஆனால், எல்லா
மருத்துவர்களும் சாக்கரையை நீங்கள் ஒழுங்காக வைத்துக் கொள்ளவில்லை.
அதனால்தான் நோய்கள் வந்து விட்டன என்று கூறுவார்கள். உண்மையில், சர்க்கரையை
ஒழுங்காக வைத்திருந்ததால்தான் நோய் வந்தது என்பதுதான் உண்மை.
இப்படி,
மருந்து மாத்திரை கம்பெனிகள் குழந்தையைக் கிள்ளி விட்டுத் தொட்டிலை
ஆட்டுவது போல நல்லது செய்வது போல் நமக்கு மருந்து மாத்திரைகளைக் கொடுத்து
நமக்கு அனைத்து நோய்களையும் வர வைத்து அனைத்து மருந்து, மாத்திரைகளையும்
விற்பதற்காக, அறுவை சிகிச்சைகள் செய்து சம்பாதிப்பதற்காகப் போட்ட அற்புதமான
திட்டம்தான் சர்க்கரை நோயென்ற ஒரு வியாபாரத் திட்டம்!
Sugar Free (சுகர் ப்ரீ) பற்றிய தெளிவான விளக்கம்
உணவில்
சர்க்கரை இருக்கிறது என்பதற்காகத்தான் நாம் உணவைச் சாப்பிடுகிறோம். நமது
உடலுக்குச் சர்க்கரை தேவை என்பதால்தான் சாப்பிடுகிறோமே தவிர, வேறு ஒரு
காரணமும் இல்லை. சுகர் ப்ரீ என்பது குப்பையில் கொட்ட வேண்டிய ஒரு பொருள்.
எப்பொழுது ஒரு உணவில் கார்போஹைட்ரேட் என்ற சர்க்கரை இல்லையோ, அது
உடலுக்குத் தேவையே கிடையாது. எனவே, தயவு செய்து, சுகர் ப்ரீ என்ற பெயரில்
எதையுமே சாப்பிடாதீர்கள்! சர்க்கரை என்றால் என்ன, செல்கள் என்றால் என்ன,
உடல் எவ்வாறு இயங்குகிறது என்பவை தெரியாதவர்கள், புரியாதவர்கள் பேசும்
பேச்சு அது. ஒரு உணவில் சர்க்கரை இருந்தால் மட்டும்தான் அது உணவு. சர்க்கரை
இல்லாத எந்தவொரு பொருளும் உணவே கிடையாது.
"அரிசிச்
சாதம் சாப்பிடாதீர்கள்; அதில் சர்க்கரை அதிகமாக உள்ளது. சப்பாத்தி
சாப்பிடுங்கள்" என்று கூறுகிறார்கள். அரிசிச் சாதத்திலும் சர்க்கரைதான்
உள்ளது, சப்பாத்தியிலும் சர்க்கரைதான் உள்ளது. சரி, வட இந்தியாவில்
அனைவரும் சப்பாத்தி சாப்பிடுகிறார்களே, அவர்களுக்கு ஏன் சர்க்கரை நோய்
வருகிறது? வட இந்தியாவில் போய்ப் பாருங்கள்! "சப்பாத்தி அதிகம்
சாப்பிடாதீர்கள்! அதனால்தான் சர்க்கரை நோய் வருகிறது. அரிசி உணவு எடுத்து
கொள்ளுங்கள்" என்று கூறுகிறார்கள். அனைத்து உணவுகளிலும் சர்க்கரைதான்
இருக்கிறது. எதைச் சாப்பிட்டாலும் சர்க்கரையாகத்தான் மாறும்.
இனிப்புக்கும், சர்க்கரைக்கும் சம்பந்தமே கிடையாது. இதைப் புரிந்து
கொண்டால் சர்க்கரை நோயாளிகள் இந்த நிமிடம் முதல் இனிப்பு சாப்பிடலாம்.
இட்லி
என்பது சர்க்கரை. சப்பாத்தியில் சர்க்கரை உள்ளது. உருளைக்கிழங்கு
போண்டாவில் சர்க்கரை உள்ளது. இட்லி இனிக்கிறதா? சப்பாத்தி, உருளைக்கிழங்கு
போண்டா இனிக்கிறதா? இதிலிருந்து என்ன புரிந்து கொள்கிறோம்? சர்க்கரை
இனிக்காது. இனிப்பு என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு பொருள். இது நாக்கால்
ஜீரணிக்கப்பட வேண்டிய ஒன்று. சர்க்கரையென்பது கண்ணுக்குத் தெரியும் பொருள்.
இது வயிற்றால் ஜீரணிக்கப்பட வேண்டிய ஒன்று. சர்க்கரை இனிக்க வேண்டிய
அவசியம் கிடையாது. எனவே, தயவு செய்து இனிப்புகளைப் பார்த்து
பயப்படாதீர்கள்!
நமது
சிகிச்சையில், ஒரு உணவை எப்படிச் சாப்பிட்டால் அதை நல்ல சர்க்கரையாக மாற்ற
முடியுமென்ற வித்தையைச் சொல்லிக் கொடுக்கிறோம். அதைக் கற்றுக்கொண்டு இந்த
நிமிடம் முதல் எல்லா உணவுகளையும் நாம் கூறிய முறையில் சாப்பிட்டு, நல்ல
சர்க்கரையாக மாற்றி அனுப்பும்பொழுது இயற்கையாகவே நமது கணையம் இன்சுலின்
சுரக்க ஆரம்பித்து விடுகிறது. இயற்கையாகவே இன்சுலின் சுரப்பதற்கு வழி
இருக்கும்போது இனி ஏன் நாம் மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டும்?
நாம்
சொல்லுவது சில பேருக்குப் பயம் ஏற்படுத்தும்; இவர் பேச்சைக் கேட்டு நாம்
சர்க்கரை மருந்து, மாத்திரையை நிறுத்திவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏதாவது
ஏற்படுமோ என்று. ஒன்று செய்யுங்கள்! நாம் சொல்லும் சில வழிமுறைகளைப்
பயன்படுத்துவதற்கு முன்பாக நீங்கள் ஒரு மருத்துவமனையில் சென்று அட்மிட்
ஆகிக் கொள்ளுங்கள்! நாம் சொல்லும் பிரகாரம் சாப்பிடுங்கள். இன்சுலின்,
மருந்து, மாத்திரை போட்டுக்கொள்ள வேண்டாம்! ஒரு நாள் முழுவதும்
மருத்துவமனையில் இருங்கள்! காலையில் சாப்பிட்ட பின் இன்சுலின், மருந்து,
மாத்திரை எதுவும் போட்டுக் கொள்ளாமலே மதியம் மீண்டும் பசி எடுத்தாலே என்ன
அர்த்தம்? உங்கள் கணையம் இன்சுலின் சுரந்து விட்டது என்று அர்த்தம்! நாம்
சாப்பிட்ட சாப்பாட்டுக்கு இரண்டு மணி நேரத்தில் அல்லது மூன்று மணி
நேரத்தில் இன்சுலின் சுரக்க வேண்டும். இல்லையென்றால் மயக்கம் வந்து விடும்.
எப்பொழுது நமது முறைப்படி சாப்பிட்டு ஒரு நாள் முழுவதும் உங்களுக்கு
மயக்கமே வரவில்லையோ உங்களுக்குக் கணையம் கெட்டுப் போகவில்லை என்பது
அப்பட்டமாகத் தெரிகிறது.
சில
சர்க்கரை நோயாளிகளுக்குக் கணையம் கெட்டுப் போவதாலும் சர்க்கரை நோய்
வருகிறது. ஆனால், அது ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டும்தான். எனவே, நமது
முறைப்படி சாப்பிடுங்கள். ஒரு நாள் முழுவதும் மயக்கம் வரவில்லையென்றால்
உங்களுக்குக் கணையம் கெட்டுப் போனதால் வந்த சர்க்கரை நோய் கிடையாது, ஜீரணம்
கெட்டுப் போவதால் வந்த சர்க்கரை நோய்தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இது உறுதியானதும் உங்கள் மருந்து மாத்திரைகளைப் படிப்படியாகக் குறைத்து ஒரு
மாதம் முதல் ஆறு மாதத்திற்குள் மொத்தமாக அவற்றை நிறுத்தி விட்டு
சந்தோஷமாக, சௌக்கியமாக இருங்கள்!
ஆக,
மீண்டும் மீண்டும் நாம் சொல்வது, சாக்கரை நோயென்பது கணையம் சம்பந்தப்பட்ட
நோயில்லை. ஜீரணம் சம்பந்தப்பட்ட நோய். உணவை எப்படிச் சாப்பிட்டால் அது நல்ல
சர்க்கரையாக மாறும் என்பதை நாம் பார்க்கப் போகிறோம்! அதன் மூலமாகச்
சர்க்கரை நோய் இல்லாத உலகத்தையும் நாம் கூடிய விரைவில் பார்க்கப் போகிறோம்!
அழுகிய நிலையில் உள்ள காலை கூட காப்பாற்றலாம்

இதற்கு
ஒரேயொரு தீர்வு வாயில் சாப்பிடும் உணவிலுள்ள கார்போ ஹைட்ரேட்டை வாய்,
வயிறு, சிறுகுடல் ஆகிய மூன்று இடங்களிலும் ஒழுங்காக ஜீரணம் செய்து தரம்
வாய்ந்த வீரியம் வாய்ந்த நல்ல சர்க்கரையாக செய்து இரத்தத்தில் கலக்குவது
எப்படி என்ற ஒரு சுலபமான ஒரு (டெக்னிக்கை) வித்தையைத் தெரிந்து கொள்வது
மூலமாக மட்டுமே சர்க்கரை நோயை குணப்படுத்த முடியும்.
முதலில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை பிறகு டோஸ் அதிகமாகிக்கொண்டே போகும்.
பிறகு உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படும். பிறகு அனைத்து
உறுப்புககளிலும் புதுப்புது நோய் வரும். இப்படி உடலில் வந்த நோய்களுக்குக்
கத்தி வைத்து வெட்டுவது மருத்துவம் கிடையாது. அந்த உறுப்பை குணப்படுத்துவது
தான் வைத்தியம். கடைசியாக மாத்திரையின் டோஸ் அதிகமாகி பிறகு ஒரு
குறிப்பிட்ட அளவுக்கு மேல் டோஸ் கொடுக்க முடியாது என்ற போது இன்சுலின் என்ற
திரவத்தை ஊசி வழியாக செலுத்தச் சொல்வார்கள்.
மாத்திரைக்கும் இன்சுலினுக்கும் என்ன வித்தியாசம் என்றால் மாத்திரை
கணையத்திடம் சென்று கணையத்திடம் இருக்கும் இன்சுலினை எடுத்து கெட்ட
சர்க்கரைக்கு கொடுக்கும். இன்சுலின் என்ன செய்யும் என்றால் கணையத்திடம்
போகாது, கேட்காது. நேரடியாக இரத்தத்திலுள்ள கெட்ட சர்க்கரைகளுக்கு இசுளின்
கொடுத்து விடும். எலி, பன்றி போன்ற விலங்குகளிடமிருந்து சுரக்கும்
இன்சுலினை எடுத்து கடைகளில் விற்கிறார்கள். நாம் அதை வாங்கி நமது
உடம்புக்குள் செலுத்திக் கொள்கிறோம்.
இப்படி சர்க்கரை நோய்க்கு மருந்து, மாத்திரை, இன்சுலின் யார் யாரெல்லாம்
பயன்படுத்துகிறோமோ அவர்கள் எல்லாமே கெட்ட சர்க்கரைக்கு நல்ல சர்க்கரை என்ற
சர்டிபிகேட் கொடுத்து உடலிலுள்ள அனைத்து உறுப்புகளையும் கெடுக்கிறோமே தவிர
இதனால் எந்தவொரு நன்மையும் கிடையாது. போகப்போக நோய் அதிகமாகிக் கொண்டே
வருகிறதா? இல்லை குணமாகிக் கொண்டு வருகிறதா?
சர்க்கரை நோயாளிகளுக்குக் காலில் மத மதப்பு, எரிச்சல், குத்துதல், குடைதல்
போன்றவை ஏற்படும். இது ஏன் ஏற்படுகிறது என்றால் ஒரு பாட்டிலின்
அடிப்பகுதியில்தான் அதிக நேரம் தண்ணீர் இருக்கும். பாட்டிலின் மேல்
பக்கத்தில் குறைந்த நேரம்தான் தொட்டுக் கொண்டிருக்கும். அதை போல நமது உடல்
ஒரு பாட்டில் போன்றது. இரத்தம் நீர் போன்றது. உடலிலுள்ள இரத்தம் முதலில்
உள்ளங்காலை நோக்கித்தான் பாய்ந்து செல்லும், புவியீர்ப்பு விசையின் காரணமாக
நமது உடலின் உள்ளங்கால்தான் இரத்தத்தில் உள்ள பொருட்களை முதன் முதலில்
எடுக்கும். பிறகு மூட்டு, பிறகு இடுப்பு, பிறகு வயிறு, இப்படி மேல் நோக்கி
செல்லும். எனவே, சர்க்கரை மருந்து, மாத்திரை இன்சுலினின் மூலமாகக்
கிடைக்கும் கெட்ட சர்க்கரைகளை முதன்முதலில் உள்ளங்கால்தான் சாப்பிடுகிறது.
கெட்ட சர்க்கரையைச் சாப்பிடுவதால் உள்ளங்காளலுக்கே முதன்முதலில் நோய்
ஏற்படுகிறது. இது உள்ளங்காலில் இருக்கும் செல்கள் கெட்டுப் போவதால்
ஏற்படுவதில்லை. உள்ளங்காலில் இருக்கும் செல்கள் செத்துப் போவதால்
ஏற்படுகிறது.
கெட்டுப் போவதற்கும் செத்துப் போவதற்கும் வித்தியாசம் உண்டு. ஆனால், நாம்
உள்ளங்காலில் வலி வந்தவுடன் யோகா, மூச்சுப்பயிற்சி, முத்ரா, ரெய்க்கி போன்ற
மருந்தில்லா மருத்துவத்திற்குச் செல்வோம். ஆனால், மருந்து மாத்திரையை
மட்டும் விடமாட்டோம். சிறிது காலத்திற்குப் பிறகு இந்த மருந்தில்லா
மருத்துவத்தை நாம் திட்டுவோம். நான் யோகாவுக்குச் சென்றேன்.
அக்குபஞ்சருக்குச் சென்றேன். ஆனால், கால் வலி குறையவில்லை என்று ஆனால்
நீங்கள் மருந்து மாத்திரையை நிறுத்தி விட்டீர்களா? இல்லையா? சர்க்கரை
மருந்து, மாத்திரைகளை நிறுத்தாத வரையில் எந்த மருந்தில்லாத வைத்தியத்தாலும்
உங்கள் நோயைக் குணப்படுத்த முடியாது. மருந்து மாத்திரைகள் மூலமாக உடலைக்
கெடுக்கும் வேலையை மட்டும் சரியாக செய்து விட்டு மருந்தில்லாத
வைத்தியத்திற்க்குச் சென்று ஏன் அதைக் குறை கூறுகிறீர்கள்?
கால் மதமதப்பு, எரிச்சல் உள்ள நோயாளிகள் சிறிது காலத்திற்குப் பிறகு காலில்
புண் தோன்றும். உடலில் எந்த இடத்தில் புண் வந்தாலும் ஆறிவிடும். ஆனால்,
உள்ளங்காலில் வந்த புண் மட்டும் ஆறாது. ஏனென்றால், உயிரைக் காப்பாற்றி
கொள்ளவே முடியாத செல்கள் புண் வந்தால், நோய் வந்தால் எப்படித் தன்னை
குணப்படுத்தும்? பிறகு அந்த புண்ணிற்கு ஆப்பரேஷன் செய்வதற்கும், நாம் அதே
மருத்துவரிடம்தான் செல்கிறோம். சில பேருக்கு உள்ளங்கால் மோசமாக பாதித்து
பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும். அதன் பிறகு, கட்டை விரலிலுள்ள செல்கள்
அழுகிப் போய் கட்டை விரலுக்கு நோய் ஏற்படும். மருத்துவரிடம் சென்று
காண்பித்தால் உங்களுக்கு சுகரினால்தான் கட்டை விரல் அழுகிப் போச்சு என்று
கட்டை விரலை அறுத்து எடுப்பதற்கு ஆபரேசனுக்கு நாள் குறிப்பார்கள்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். யாராவது உங்கள் மருத்துவரிடம் சென்று நான்
ஆரம்பத்தில் இருந்து உங்களிடம்தான் வந்தேன். நீங்கள்தான் சர்க்கரை நோய்
வந்துவிட்டதென்று சிறிய மாத்திரையைக் கொடுத்தீர்கள். நானும் சாப்பிட்டேன்.
சுகரை டெஸ்ட் செய்ய சொல்லி எனக்குக் கற்று கொடுத்தீர்கள். நானும், தினமும்
டெஸ்ட் செய்து வந்தேன். மருந்து மாத்திரையின் டோஸ் அதிகமானது. நானும்,
அதிகப்படுத்திக் கொண்டேன். அன்று முதல் இன்றுவரை தினமும் சரியாக மருந்து
மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். பிறகு உடலில் பல உறுப்புகளில் நோய்
வருகிறதென்று புதுப்புது மருந்து மாத்திரையைக் கொடுத்தீர்கள். பிறகு
இன்சுலின் என்ற ஊசியும் கொடுத்தீர்கள். தினமும் வாக்கிங் போகச்
சொன்னீர்கள். நான் போய் கொண்டிருக்கிறேன். இனிப்பு சாப்பிடக் கூடாதென்று
கூறினீர்கள். நான் கடந்த பாத்து வருடமாக இனிப்பு சாப்பிடுவதில்லை. நீங்கள்
சொன்ன அனைத்தையும் ஒழுங்காகச் செய்தேனே, என்னுடைய கட்டைவிரல் ஏன் அழுகிப்
போனத் என்று யாராவது உங்கள் மருத்துவரிடம் கேட்டீர்களா?
உங்களுக்கு ஒரு இரகசியம் சொல்கிறேன். உங்கள் மருத்துவர் சொன்ன அனைத்தையும்
ஒழுங்காக நீங்கள் செய்ததால்தான் உங்கள் கட்டை விரல் அழுகிப் போய் விட்டது.
கட்டை விரலை எப்பொழுது வெட்டி எடுக்கிறீர்களோ, தயவு செய்து இப்போதிருந்தே
பணத்தைச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், சில மாதங்களுக்குப்
பிறகு உங்கள் காலை வெட்டியெடுக்க வேண்டியது வரும். ஏனென்றால், நீங்கள்
சர்க்கரை மாத்திரையை மட்டும் விடுவதில்லையல்லவா? அடுத்து மூட்டு காலை வெட்ட
வேண்டியது வரும். அடுத்தது தொடை அருகே வெட்ட வேண்டியது வரும். இப்படி
எத்தனையோ பேர் தொடைகளை, கால்களை வெட்டி வீட்டில் படுத்த படுக்கையாக
இருக்கிறார்கள்.
இன்னுமாங்க புரியல சர்க்கரை நோயை எந்த மருந்து மாத்திரையாலும் குணப்படுத்த
முடியாது என்று. சர்க்கரை நோய் என்பது நோயே கிடையாது. இதற்கு ஒரேயொரு
தீர்வு வாயில் சாப்பிடும் உணவிலுள்ள கார்போ ஹைட்ரேட்டை வாய், வயிறு,
சிறுகுடல் ஆகிய மூன்று இடங்களிலும் ஒழுங்காக ஜீரணம் செய்து தரம் வாய்ந்த
வீரியம் வாய்ந்த நல்ல சர்க்கரையாக செய்து இரத்தத்தில் கலக்குவது எப்படி
என்ற ஒரு சுலபமான ஒரு (டெக்னிக்கை) வித்தையைத் தெரிந்து கொள்வது மூலமாக
மட்டுமே சர்க்கரை நோயை குணப்படுத்த முடியும்.
நமது சிகிச்சையில் சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடலாம். சர்க்கரை
நோயாளிகள் இனிப்பு சாப்பிடக் கூடாதென்கிறார்களே? பத்து வருடமா சாப்பிடாமல்
இருக்கிறீர்களே உங்கள் நோய் குணமாகி விட்டதா? சர்க்கரை நோய்க்கும்,
இனிப்புக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. எனவே, நமது சிகிச்சையில்
சர்க்கரை நோயாளிகள் இனிப்புச் சாபிட்டால் மட்டுமே சர்க்கரை வியாதி
குணமாகும். அதாவது, சர்க்கரை அளவு அதிகரிப்பதால் நோய் வருவதில்லை.
சர்க்கரையின் தரம் குறைவதால் மட்டுமே நோய் வருகிறது. எனவே, நாம் இனிப்பு,
எண்ணெய் பலகாரம், உருளைக்கிழங்கு போண்டா, சாப்பாடு, சப்பாத்தி எதுவாக
இருந்தாலும் எப்படி சாப்பிட வேண்டுமென்ற வித்தையைக் கற்றுக் கொண்டு அதன்படி
சாபிட்டால் நல்ல சர்க்கரை இரத்தத்தில் கலக்கும் பொழுது இயற்கையாகவே
இன்சுலின் சுரந்து விடும். எனவே,சர்க்கரை நோயை உடனடியாக குணப்படுத்த
முடியும்.
எனவே, சர்க்கரை அதிகமாக உள்ளதென்று தயவு செய்து பயப்பட வேண்டாம். யாருடைய
உடம்பில் நிறைய சர்க்கரைகளைச் சேர்த்து வைக்கிறீர்களோ, உங்கள் உயிர்
காப்பாற்றப்படும். ஒருவர் இரவு 10 மணிக்கு ஒரு காட்டுப் பகுதியில்
விபத்துக்குள்ளாகி ரோட்டில் கீழே விழுந்து கிடக்கிறார். அவரைக் காப்பாற்ற
யாரும் கிடையாது. காலை பத்து மணிக்கு அவரை பார்த்து காப்பாற்றினால் அவருடைய
உடம்பில் கிளைக்கோஜன் என்ற சேமித்து வைக்கப்பட்ட சர்க்கரையின் அளவு
அதிகமாக இருந்திருந்தால் அவர் இரவு பத்து மணி முதல் காலைபது மணி வரை அந்த
சர்க்கரை இரத்தத்தில் விநியோகம் செய்வது மூலமாக உயிரைக் காப்பாற்றியிருக்க
முடியும். யாருடைய உடம்பில் அதிக சர்க்கரை சேமித்து வைக்கப்படுகிறதோ,
அவர்களுக்குப் பல மணி நேரம் ஆபத்தின் பொழுது உயிரை காப்பாற்ற முடியும்.
இப்படி சர்க்கரை நார்மல் என்ற பெயரில் யார் யாரெல்லாம் சர்க்கரையை ஒழுங்காக
வைத்துக் கொண்டு இருக்கிறீர்களோ உங்கள் உடம்பில் சேமித்து வைக்கப்பட்ட
சர்கரையே இருக்காது. சர்க்கரைக்குப் பல வருடங்கள் மருந்து மாத்திரை
சாப்பிடுபவர்கள் மருத்துவமனையின் முன்பாக விபத்து ஏற்பட்டால் உள்ளே
செல்வதற்குள் உயிர் போக வாய்ப்புள்ளது. ஏனென்றால், நீங்கள் உங்கள்
வங்கியில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள். எவ்வளவு நகை
வைத்திருக்கிறீர்கள். எவ்வளவு இடம், சொத்து வைத்திருக்கிறீர்கள் என்பது
வெளி உலகத்திற்கான சொத்து. உடலில் எவ்வளவு கிளைகொஜன் என்ற சேமிக்கப்பட்ட
சர்க்கரை இருக்கிறதோ, அதுதான் உயிரின் சொத்து.
எனவே, தயவு செய்து நன்றாக சாப்பிடுங்கள்.
சர்க்கரை உள்ள பொருட்களை நிறையாக சாப்பிடுங்கள். கிளைக்கோஜன் நிறைய
சேர்த்து வையுங்கள். உங்கள் உயிர் காப்பாற்றபடுமே தவிர உங்களுக்கு நோய்
வராது. சர்க்கரை அதிகமானால் நோய் அன்று கூறுகிறார்களே அவசர காலத்தில்
யாரவது உடலுக்கு எதாவது பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்றால்
வெளியில் வரும் பொழுது பெருமையாக சொல்கிறீர்களே மருத்துவமனையில் எனக்கு 16
பாட்டில் குளுகோஸ் டப்பா மாட்டினார்கள் என்று. கொஞ்சம் யோசித்துப்
பாருங்கள். உயிரை காப்பது குளுகோஸ் டப்பாதானே! அப்பொழுது உயிரைக் காப்பது
சர்க்கரைதானே. ஒவ்வொரு செல்லுக்கும் அடிப்படை தேவையான ஒரு சர்க்கரையை
சேர்த்து கொள்ள கூடாதென்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்.
து
உதடும் மண்ணீரலும் ஒரே மாதிரியான வடிவத்தில் இருக்கும். உதட்டில் ஏதாவது
புண் ஏற்பட்டால் அதற்குக் காரணம் வயிற்றில் புண் இருப்பது. வயிற்றில்
ஏற்படும் உபாதைகளுக்கு உதட்டிலே அறிகுறி தெரியும். எனவே, உதட்டில் வரும்
நோய்களுக்கு உதட்டில் மருந்து தடவுவதால் குணம் பெற முடியாது. வயிற்றைச்
சுத்தப்படுத்துவதால் மட்டுமே தீர்வு காண முடியும்.
இனிப்பு
என்ற சுவை நாக்கில் படும்பொழுது சுவை மொட்டுக்கள் அதை மண் பிராணசக்தியாக
மாற்றி உடல் முழுவதும் அனுப்புகின்றன. மண் பிராணசக்தி மூலமாக இயங்கும்
உறுப்புகள் இரைப்பை, மண்ணீரல், உதடுகள். இனிப்புக்கும் கவலைக்கும்
சம்பந்தம் உண்டு.
நமது
உதடும் மண்ணீரலும் ஒரே மாதிரியான வடிவத்தில் இருக்கும். உதட்டில் ஏதாவது
புண் ஏற்பட்டால் அதற்குக் காரணம் வயிற்றில் புண் இருப்பது. வயிற்றில்
ஏற்படும் உபாதைகளுக்கு உதட்டிலே அறிகுறி தெரியும். எனவே, உதட்டில் வரும்
நோய்களுக்கு உதட்டில் மருந்து தடவுவதால் குணம் பெற முடியாது. வயிற்றைச்
சுத்தப்படுத்துவதால் மட்டுமே தீர்வு காண முடியும்.
கவலைக்கும் மண் பிராணனுக்கும் சம்பந்தம் உண்டு. சிலர் மனதில் கவலை வந்தால்
சாப்பிட மாட்டார்கள். பசிக்கவில்லை என்று கூறுவார்கள். ஆனால், உடன்
இருப்பவர்கள் "நீ ஒன்றுமே சாப்பிடாமல் இருக்கிறாய். சாப்பிடு, சாப்பிடு"
என்று வற்புறுத்தி உணவைக் கொடுப்பார்கள். கவலை என்ற உணர்ச்சி உடலில் மண்
சம்பந்தப்பட்ட பிராண சக்தியை அதிகமாக ஈர்த்துக் கொள்வதால் ஜீரணத்திற்கான
சுரப்பிகள் சுரப்பதில்லை. அதனால் பசி எடுப்பதில்லை. இப்படிக் கவலையாக
இருக்கும்பொழுது உணவைச் சாப்பிட்டால் வயிறு அதிகமாகக் கஷ்டப்பட்டு, கவலை
அதிகமாகும். எனவே, கவலை வந்தால் வயிற்றுக்கு உணவு கொடுக்காதீர்கள்!
எப்பொழுது பசிக்கிறதோ அப்பொழுது மட்டுமே சாப்பிடுங்கள்! எப்பொழுது பசி என்ற
உணர்ச்சி இருக்கிறதோ அப்பொழுது கவலை இருக்கவே இருக்காது. கவலையும் பசியும்
எதிரிகள்.
நாம் அனைவரும் குடும்பம், வியாபாரம், பணம், புகழ் போன்ற பல விஷயங்களைப்
பற்றி எப்பொழுதும் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். இதற்குக் காரணம்
வயிற்றை ஒழுங்காக வைத்துக் கொள்ளாததுதான். வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக்
கொள்ளும் எவருக்கும் எந்த விஷயத்திற்கும் கவலை வராது.
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் எவருக்கும் பயம் என்கிற
உணர்ச்சி வராது. கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் நபருக்குக் கோபம்
வராது. ஞானிகள், முனிவர்கள் ஆகியோருக்குக் கோபம், பதற்றம், பயம், கவலை
ஆகியவை வருவதில்லை. ஏனென்றால், அவர்கள் உடலை ஆரோக்கியமாக
வைத்திருக்கிறார்கள்.
இனிப்பு சாப்பிட்டே சர்க்கரை நோயைக் குணப்படுத்தலாம்
நம்
மனம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நேரடியாக மனதைக் கட்டுப்படுத்துவதை விட,
உடலை ஆரோக்கியமாக்கிக் கொள்வது மூலம் மனதை சுலபமாக அமைதிப்படுத்தலாம்.
இதுவரை நம் வாழ்வில் நடந்த கசப்பான விஷயங்களை அப்படியே விட்டுவிட்டு
இனிமேல் உடலை ஆரோக்கியமாக வைப்பது மூலமாகப் புதிய கவலை, கோபம், பயம்
இல்லாமல் வாழலாம். பழைய விஷயங்களை அழித்தும் நாம் மனரீதியாக ஆரோக்கியமாக
வாழ முடியும்.
சர்க்கரை
நோயாளிகள் இனிப்பு சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பலர் பல வருடங்களாக இனிப்பு சாப்பிடாமல் இருக்கிறீர்களே, உங்கள் சர்க்கரை
நோய் குணமாகி விட்டதா? எத்தனை வருடகாலம் இனிப்பு சாப்பிடாமல் இருந்தால்
சர்க்கரை நோய் குணமாகும் என்று உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்!
இப்படிப் பல வருடங்களாக இனிப்பு சாப்பிடாமல் இருந்தும் உங்கள் நோய் குணமாகவில்லையே, பிறகு ஏன் இந்த விஷயத்தைக் கடைப்பிடிக்கிறீர்கள்?
இனிப்பு
என்ற சுவை நாக்கில் பட்டவுடன் நாக்கு அதை மண் பிராண சக்தியாக மாற்றுகிறது.
மண் பிராண சக்தி வயிற்றுக்கு சக்தி கொடுத்து அதை வேலை செய்ய வைக்கிறது.
எனவே நீங்கள் இட்லி, சப்பாத்தி போன்ற உணவுகள் சாப்பிட்டு ஒரு மணி
நேரத்திற்குப் பிறகு இனிப்பு சாப்பிட்டால் இனிப்பு இரைப்பையை வேலை செய்ய
வைத்து நீங்கள் சாப்பிட்ட உணவுகளில் உள்ள சர்க்கரையை இரத்தத்தில் கலக்கச்
செய்கிறது. இனிப்பு இரைப்பையை வேலை செய்ய வைக்கும், அவ்வளவுதான். இனிப்பு
நேரடியாகச் சர்க்கரையாக மாறாது! நாம் சாப்பிட்ட பொருளில் உள்ள சர்க்கரை
மட்டுமே இரத்தத்தில் கலக்கும்.
சர்க்கரை
நோயாளிகள் இனிப்பு சாப்பிடாமல் இருப்பதால் நாம் சாப்பிடுகிற இட்லி,
சாப்பாடு, சப்பாத்தியில் உள்ள சர்க்கரையை இரைப்பை ஜீரணம் செய்யாமல் கழிவாக
அனுப்பி விடுகிறது. இனிப்பு சாப்பிட்டால்தான் இரைப்பை வேலை செய்யும்.
இரைப்பை வேலை செய்தால்தான் உணவில் உள்ள சர்க்கரை இரத்தத்தில் கலக்கும்.
இரத்தத்தில் சர்க்கரை கலந்தால்தான் நம் உடலில் உள்ள அனைத்து
உறுப்புகளுக்கும் உணவு கிடைக்கும்.
உணவை
எப்படிச் சாப்பிட வேண்டும் என்று தெரியாமல் அரைகுறையாக ஜீரணம் செய்து
சாப்பிடுவதால் இனிப்பு சாப்பிட்டவுடன் சர்க்கரை கெட்ட சர்க்கரையாக மாறி
இரத்தத்தில் கலக்கிறது. இந்தக் கெட்ட சர்க்கரைக்கு இனிசுலின் கிடைக்காது.
அதனால்தான் சர்க்கரை நோய் வருகிறது.
நாம்
நமது சிகிச்சையில் உணவில் உள்ள சர்க்கரையை எப்படி நல்ல சர்க்கரையாக
மாற்றுவது என்பதைக் கற்றுக்கொள்ளப் போகிறோம். அந்த வித்தையைக்
கற்றுக்கொண்டு சாப்பிடும்பொழுது இனிப்பும் சேர்த்துச் சாப்பிட்டால்தான்
ஜீரண வேலை நடந்து இரத்தத்தில் சர்க்கரை கலக்கும்!
நாம்
சாப்பிடுவதே இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டுவதற்குதான். அனைத்து
உணவுகளிலும் சர்க்கரை உள்ளது. எனவே, இந்தச் சிகிச்சையைக் கற்றுக்கொண்ட
பிறகு இனிப்புப் பொருட்களைத் தராளமாக நீங்கள் சாப்பிடலாம். சர்க்கரை உள்ள
பொருட்களை ஆசை தீரச் சாப்பிடுங்கள்! இதனால் உடலுக்கு எந்தப் பாதிப்பும்
ஏற்படாது. ஆனால், வெள்ளைச் சர்க்கரையை மட்டும் சேர்த்துக் கொள்ளாதீர்கள்!
ஏனென்றால், அதில் சல்பர் என்ற கொடிய விஷம் உள்ளது. மற்றபடி நாட்டுச்
சர்க்கரை, வெல்லம், பஞ்சாமிர்தம், தேன், பலாப்பழம் என அனைத்து வகை
இனிப்புகளையும் நீங்கள் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
உங்கள்
நாக்கு எவ்வளவு இனிப்பைக் கேட்கிறதோ அவ்வளவு தயவு செய்து சாப்பிடுங்கள்!
முதலில் இனிப்பு ஒரு துண்டு சாப்பிடுங்கள்! உங்களுக்குப்
பிடித்திருக்கிறதா? பரவாயில்லை, இரண்டாவது துண்டும் சாப்பிடுங்கள்!
பிடித்திருக்கிறதா? பரவாயில்லை, மூன்றாவது முறையும் சாப்பிடுங்கள்!
மூன்றாவது முறை இனிப்பைச் சாப்பிடும்பொழுது திகட்டல் ஏற்பட்டால் அதன் பிறகு
சாப்பிடக் கூடாது! திகட்டிய பிறகு இனிப்புச் சாப்பிடும்பொழுது அது
உடலுக்கு நோயை ஏற்படுத்தும். எவ்வளவு இனிப்புச் சாப்பிட்டால் மனதிற்கு
மகிழ்ச்சியாக இருக்குமோ அவ்வளவு இனிப்பைச் சாப்பிடலாம். ஏனென்றால்
நாக்குதான் டாக்டர்! சுவைதான் மருந்து! இனிப்பு என்ற மருந்தை நமது நாக்கு
என்ற டாக்டர் கேட்கும்பொழுது கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும்! இப்படி
இனிப்புச் சாப்பிடாமல் இருந்தால் உடலுக்கு நோய் வரும்!
இப்படி,
இனிப்புக்கும் மண் பிராணனுக்கும் இரைப்பை, மண்ணீரல், உதடுகள், கவலை
ஆகியவற்றுக்கும் சம்பந்தம் உள்ளது என்பதைப் புரிந்து கொண்ட மருத்துவரால்
மட்டுமே இந்த உறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்த முடியும்.
நன்றி - ஹீலர் பாஸ்கர் (அனாடமிக் தெரபி)
No comments:
Post a Comment